Hot Posts

6/recent/ticker-posts

பிரபல குளிர்பானத்திற்குத் தமிழ் அரசரின் பெயரா?

 


எந்த ஒரு ஆங்கிலப் பெயர்ச்சொல்லாக இருந்தாலும் அதைத் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று தொன்மையான யாருக்கும் புரியாத தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து ஒரு புதிய வார்த்தையை உருவாக்குபவர் தான் முடி ஈசன். 
அப்படி ஒரு நாள் பிரபல குளிர்பானம் ஒன்றின் பெயர் தமிழ் மன்னனின் பெயரில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அந்த மன்னனின் பெயர் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழனின் பெயரில் உலகப் பிரபலமான குளிர்பானமா? என்ன அது என அனைவரும் கேட்க, ராஜ என்பது வடமொழிச் சொல் அதைத் தமிழில் ’கோ’ எனலாம், இவ்வாறு ராஜராஜ சோழா என்பதைத் தான் கோகோ கோழா என்று அவர்கள் வழங்குகிறார்கள் என்றார் முடி ஈசன். 
தமிழ் மீது பற்று இருக்கலாம், ஆனால் என்னைத் தவிர யாருக்குமே தமிழ் தெரியாது என்கிற அளவுக்கு யாருக்கும் புரியாதபடி அது இருக்கக்கூடாது!

#Rajarajacholan #Rajarajachozhan #CocoCola #Tamil #Thamizh #Language #LanguageManager #LanguageExpert #LanguageSpecialist #LanguageCoordinator

Post a Comment

0 Comments